Breaking News

ஐதேக வின் இன்றைய கூட்டம் குறித்து விமல் குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய கொழும்பு பொதுக் கூட்டத்துக்கு ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் கட்டாயப்படுத்தி ஆட்களை அழைத்து வரவுள்ளதாகவும், இது அரசியல் கூட்டமல்ல என்ற வதந்தியைப் பரப்பி, இளைஞர் அமைப்புக்களையும் கலந்துகொள்ளச் செய்துள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி கூட்டு எதிர்க் கட்சியின் பொதுக் கூட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 500 உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் விமல் வீரவங்ச மேலும் குறிப்பிட்டார்.