இன்றும் நாளையும் மின் வெட்டு இருக்கும் - இ.மி.ச.
தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததனால் இன்றும், நாளையும் மின்வெட்டுக்கள் இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நேற்றும் நாட்டின் பல பிரதேசங்களில் மின்வெட்டு இடம்பெற்றுள்ளது. இதனால், வைத்தியசாலைகள், தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் போக்குவரத்துக்கான சமிக்ஞ்ஞை விளக்கு செயற்படாத நிலையும் சில பிரதேசங்களில் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.








