Breaking News

நாட்டில் மீண்டும் வறுமை - அரசாங்கத்தை சாடுகிறார் மஹிந்த

நல்­லாட்சி அர­சாங்கம் தனது விருப்­ப­திற்கு ஏற்றவகையில் சர்­வ­தேச கடன்­களை பெற்றுள்­ள­மையே இன்று மக்கள் மீது வரிச்­சு­மையை சுமத்­த­வேண்­டிய நிலைமைக்கு காரணம் 2001-–04ஆம் ஆண்­டு­களில் ரணில் பிர­த­ம­ராக இருந்த காலத்தில் இருந்த அதே வறு­மை­யான நிலைமை மீண்டும் ஏற்­பட்­டுள்­ளது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார். 

கடந்த ஒரு வருட காலத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் 6,361 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பணத்தை கட­னாக பெற்­றுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­னது.

அவ்அர­சாங்கம் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்­பத்தில் பரி­மாறல் அடிப்­ப­டையில் இந்­தி­யா­விடம் இருந்து 400 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்களை பெற்­றுக்­கொண்­டது. அதன் பின்னர் மே மாதம் மீண்டும் 650 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை பெற்­றுக்­கொண்­டது. ஜூலை மாதம் மீண்டும் இந்­தி­யா­விடம் கைமாறல் அடிப்­ப­டையில் 1,100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை பெற்­றுக்­கொண்­டுள்ளது. 

பின்னர் ஒக்­டோபர் மாதம் பிணை­முறி வழங்கி மேலும் 1,500 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை பெற்­றுக்­கொண்­டது. அது மட்­டு­மல்­லாது 2015 மார்ச் மாதம் முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 12 தட­வைகள் குறு­கிய மற்றும் நீண்­ட­கால அடிப்­ப­டையில் நாட்டின் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் என்ற ரீதியில் 2,711 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்களை இலங்கை அர­சாங்கம் கட­னாக பெற்­றுள்­ளது. ஆகவே ஒரு வருட காலத்தில் இந்த அர­சாங்கம் 6,361 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பணத்தை கட­னாக பெற்­றுள்­ளது. இவ்­வாறு ஒரு வருட காலத்தில் அள­வுக்கு அதி­க­மான கடன் தொகையை நாம் ஒரு­போதும் பெற்­றுக்­கொண்­ட­தில்லை.

மத்­தள விமான நிலையம் அமைக்க 190 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செல­வா­கின. அம்­பாந்­தோட்டை துறை­முகம் அமைக்க 426 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செல­வா­கி­ன. நுரைச்­சோலை அனல் மின் நிலையம் அமைக்க 1,340 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செல­வா­கி­ன. கொழும்பு – மாத்­தறை அதி­வேக நெடுஞ்­சாலை அமைக்க 630 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செல­வா­கி­யது. கொழும்பு-–நீர்­கொ­ழும்பு அதி­வேக நெடுஞ்­சாலை அமைக்க 248 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செல­வா­கின. 

ஆனால் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் ஒரு ஆண்­டுக்குள் பெற்­றுள்ள கடன் தொகை­யினால் நாம் செய்­ததிலும் பார்க்க இரு மடங்கு மேல­தி­க­மாக அபி­வி­ருத்­தி­களை செய்து முடிக்க முடியும். ஆனால் இவர்­களால் ஒரு பாலத்தை கூட அமைக்க முடி­ய­வில்லை என்­பதே உண்­மை­யாகும். இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் உலக அளவில் எண்­ணெயின் விலை 70 தொடக்கம் 75 வீதத்தால் வீழ்ச்சி கண்­டுள்­ளது. இதனால் எமக்கு கடந்த ஆண்­டிலும் பார்க்க இம்­முறை 2,500 மில்­லியன் டொலர் எஞ்­சி­யுள்­ளது. இவ்­வ­ளவு பணம் எஞ்­சியும் பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம் மற்றும் மின்­சார சபையின் நஷ்­டத்தை தடுக்க முடி­யாது போயுள்­ளது. இவ்­வாறு அர­சாங்கம் செயற்­பட்ட கார­ணத்­தினால் முத­லீட்டு சந்­தை­யினால் இலங்­கையை அவ­தா­னித்­துக் ­கொண்டு உள்­ளனர். இதன் கார­ண­மா­கவே கடன் பட்­டி­ய­லிலும் இலங்­கையை கீழ் நிலைக்கு தள்­ளி­யுள்­ளனர்.

மேலும் அர­சாங்கம் பெற்ற கடனை தவிர இதற்கு முன்னர் ஆட்சி செய்த அர­சாங்­கங்கள் செலுத்த வேண்­டிய கடன் தொகை­யா­னது 1500 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் மட்­டு­மே­யாகும். அவ்­வா­றான கடன் தொகை இருப்­ப­தனால் எம்மை தரப்­ப­டுத்­தலில் கீழ் தள்ள மாட்­டார்கள். ஆனால் அர­சாங்கம் முறை­யற்ற வகையில் கேட்­பா­ரின்றி கடன்­களை பெற்­ற­மையே இந்த நிலை­மைக்கு கார­ண­மாகும்.

இவ்­வாறு நாம் உள்­ளதால் சர­்வ­தே­சத்­திடம் இருந்து அதிக வட்­டிக்கே கடன் பெற­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. சில நேரங்­களில் அதிக வட்­டிக்கு கூட கடன் கிடைக்க வாய்ப்­புக்கள் இல்லை. அவ்­வாறு இருக்­கையில் அர­சாங்­கம் இன்று சர்­வ­தேச நாணய நிதியம் பக்கம் திரும்­ப­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் சர்­வ­தேச நாணய நிதியம் கூட கொடை வழங்கும் நிறு­வனம் அல்ல. பெறப்­படும் கடனை மீண்டும் திரும்ப மீள­ளிக்கும் வகையில் அர­சாங்­கத்தின் வரு­மான சுட்­டியை கூட்­டிக்­கொள்ள முடியும் என வெளிப்­ப­டுத்த வேண்டும்.

வாங்­கிய கடனை திருப்பி கொடுக்­கவும் மீண்டும் கடன் வாங்­க­வுமே அர­சாங்கம் வரி­களை அதி­க­ரிக்கும். இந்த அர­சாங்கம் இந்­தி­யா­விடம் வாங்­கிய கடனை கொடுக்க நேர்ந்­த­மையே அண்­மையில் நாம் பல சிக்­கலை எதிர்­கொள்ள கார­ண­மாக அமைந்­தது. இவ்­வ­ளவு தொகையை அர­சாங்கம் கட­னாகப் பெரும் சந்­தர்­ப்பங்­களில் அதை நீண்­ட­கால கட­னாக வழங்குவது என்ற அடிப்­படையில் தான் பெறும். அந்த அடிப்­படை கார­ணி­கூட தெரி­யாது இந்த அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. 2001–04ஆம் ஆண்­டு­களில் ரணில் பிர­த­ம­ராக இருந்த காலத்தில் மொத்த தேசிய உற்­பத்­திக்கு இணை­யான கடன் சுமை 100 க்கு 102 வீத­மாக இருந்­தது.

எனது ஆட்­சியில் ஒவ்­வொரு வரு­டமும் இந்த கடன் வீதத்தை குறைத்து 2014ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் 75.5 வீத­மாக குறைக்க முடிந்­தது. இதுவே மிகவும் குறைந்த கடன் வீத­மாகும். 2006-–09 ஆம் ஆண்டு யுத்தம் நடை­பெற்ற காலத்தில் அர­சாங்­கத்தின் செல­வீனம் மொத்தத் தேசிய உற்­பத்­தியில் 100க்கு 23 சத­வீ­த­மாகும். ஆனால் யுத்­தத்தின் பின்னர் அது குறைக்­கப்­பட்டு 2014ஆம் ஆண்டு ஆகையில் 18.3 வீத­மாக குறைத்தோம். நாடு சுதந்­திரம் பெற்ற பிறகு மொத்தத் தேசிய உற்­பத்­திக்கு இணை­யாக அரசின் செலவு குறைந்த வீதம் இது­வே­யாகும்.

நாம் கடனை அதி­க­மாக பெற்றோம் என பிர­தமர் ரணில் கூறு­வது மிகப்­பெ­ரிய பொய்­யாகும். சகல அரச செயற்­றிட்­டங்­க­ளுக்கும் வங்­கி­களின் தனிப்­பட்ட கணக்கு வழக்கு உள்ளது. அந்தந்த கடன்கள் உரிய நிறுவனங்களின் சட்டதிட்டங்களுக்கு அமையவே நிர்வகிக்கப்படும். அமைச்சரவை அனுமதி இல்லாது அந்த கடன்களை பெறுவதென்றால் அதை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்று அவ்வாறு எந்த நடைமுறையும் இல்லை. அரசாங்கம் தனது விருப்பத்துக்கு சர்வதேச கடன்களை வாங்கிக்கொண்டு செல்கின்றது. ஆனால் இந்த செயற்பாட்டின் காரணமாக மக்களே இறுதியில் பாதிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.