கூட்டமைப்பு உண்மையான எதிர்க்கட்சி அல்ல!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சியே அன்றி உண்மையான எதிர்க்கட்சி அல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் உண்மையான எதிர்க்கட்சி அல்லவென குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இரண்டு எதிர்க்கட்சிகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஆளும் கட்சியால் வழங்கப்படும் என கேள்விகளையே அவர்கள் வினவுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் இன்று நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பங்கெடுப்பார்கள் என மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இரகசியமாக கடன்பெற்றமை தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ச, எந்தவொரு நாடு இரகசியமாக கடன் வழங்குகின்றது என கேள்வி எழுப்பியதுடன், இவ்வாறான கருத்துக்கள் வேடிக்கையானது என கூறியுள்ளார்.