Breaking News

கூட்­டத்தை பார்த்­து­விட்டு பதி­லடி கொடுப்போம்!

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் கூட்டம் எதுவும் நடை­பெ­ற­வில்லை. முதலில் கூட்டம் நடை­பெ­றட்டும், அதில் யார் கலந்­து­கொள்­கின்­றனர்? என்ன கதைக்­கின்­றனர் என்­பதைப் பார்த்­து­விட்டு நாம் பதி­லடி கொடுப்போம் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

கட்­சியை விட்டு எவ­ரேனும் தனித்து பய­ணிக்க வேண்டும் என்றால் எம்­முடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி இணக்கம் இல்­லாத கார­ணி­களை தெளி­வாக முன்­வைத்­து­விட்டு கட்­சியை விட்டு வெளி­யேற முடியும். தலை­மைத்­து­வத்தை விமர்­சிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மஹிந்த ஆத­ரவு அணி­யினர் இன்று கொழும்பில் அர­சாங்­கத்தை எதிர்த்து பாரிய பேரணி ஒன்றை நடத்­த­வி­ருக்கும் நிலையில் அது தொடர்பில் கட்­சியின் நிலைப்­பாடு என்­ன­வென நேற்று கொழும்பில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறு­கையில்,

பொது எதி­ர­ணியின் இன்னும் கூட்டம் நடக்­க­வில்லை. நாளை கூட்டம் இடம்­பெ­றட்டும். அதில் யார் கலந்­து­கொள்­கின்­றனர், எந்த வகையில் கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர் என்ற கார­ணி­களை அவ­தா­னித்து அதன் பின்னர் கட்­சியின் மத்­தி­ய­குழு தீர்­மானம் மேற்­கொண்­ட­தைப்­போல விசா­ர­ணை­களின் மூல­மாக உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். பதி­லடி கொடுக்­கவும் முதலில் பல­மான கார­ணிகள் இருக்க வேண்டும்.

 எனினும் இந்தக் கூட்­டத்தில் இன்னும் யாரும் கலந்­து­கொள்­வ­தாக கூற­வில்லை. அவ்­வாறு கூறும் நபர்கள் கலந்­து­கொள்­ளவும் போவ­தில்லை. எவ்­வாறு இருப்­பினும் பொறுத்­தி­ருந்து பார்ப்போம். அதேபோல் இந்த விட­யங்கள் தொடர்பில் பெரிய அளவில் கருத்தில் கொண்டு செயற்­ப­ட­வேண்­டிய தேவை இல்லை. இவர்­களும் எமது கட்­சியின் உறுப்­பி­னர்கள் என்ற வகையில் அவர்­களின் கருத்­து­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.

கட்­சியை விட்டு எவ­ரேனும் தனித்து பய­ணிக்க வேண்டும் என்றால் எம்­முடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து இணக்கம் இல்­லாத கார­ணி­களை தெளி­வாக முன்­வைத்­து­விட்டு கட்­சியை விட்டு வெளி­யேற முடியும். அதை­வி­டுத்து கட்­சியில் இருந்­து­கொண்டு தலை­மைத்­து­வத்தை விமர்­சித்­துக்­கொண்டு செயற்­ப­டு­வது கட்­சிக்கு நல்ல விடயம் அல்ல.

எவ்­வாறு இருப்­பினும் இன்று ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி அல்­லது மஹிந்த அத­ரவு அணி­யினர் என கூறிக்­கொண்டு செயற்­பட்­டாலும் இறு­தியில் அனை­வரும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணியில் தான் வருவார்கள். எவ்வாறு இருப்பினும் அனைத்து அணியினரையும் ஒன்றிணைத்து ஒரு அணியாக பலப்படுத்தி 2020ஆம் ஆண்டு மீண்டும் எமது ஆட்சியை அமைப்பதே எமது பிரதான நோக்கமாகும் என்றார்.