Breaking News

அரசியல் கைதிகள் உயிரிழப்பின் பாரிய பிரச்சினை ஏற்ப்படும் - எச்சரிக்கிறார் விக்ரமபாகு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் மரணிப்பார்கள் ஆயின் அதனை பாரியதொரு பிரச்சினையாக உலக நாடுகள் எடுத்துக்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள அசாத் சாலியில் இல்லத்தில் அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியபடு இயக்கம் இன்று ஏற்பாடு செய்த ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய விக்ரமபாகு கருணாரத்ன

மனித உரிமைகள் விடயத்தில் அரசியல் கைதிகளின் பிரச்சினை முக்கியமானது என நாம் தொடர்ந்து வலியுறுத்திவந்திருந்தோம்.அரசியல் கைதிகளில் பலரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்போதும் அரசியல் கைதிகள் சிலர் தடுத்துவைக்கப்பட்டள்ளனர். எந்தவொரு காரணமும் இன்றி அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச ரீதியில் இது குறித்து பேசப்படுகின்றது. சர்வதேச ரீதியில் நாடு தொடர்பிலான நிலைப்பாடு சாதகமானதாக மாறியுள்ளது. கடந்த மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில், மனித உரிமை பிரச்சினை காணப்படும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஸ்ரீலங்கா நீக்கப்பட்டிருக்கின்றது.

நாம் மனித உரிமைகளை பாதுகாக்கிறோம் என்ற கருத்து உருவாகியுள்ளது. இவ்வாறு இருக்க ஏன் தொடர்ந்தும் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்? இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நான் நேற்று சென்றிருந்தேன். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள சட்டத்தரணிகளுக்கே பிரச்சினை உள்ளது.

உரிய சட்டத்தின் கீழ் மாத்திரமே ஒருவரை தடுத்து வைக்க முடியும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமா அதிபர் தெளிவாக கூறியுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் என்பது உரிய சட்டம் அல்ல. பயங்கரவாத சட்டம் என்பது பெறுமதியான சட்டம் அல்ல. அவசியமான சட்டமும் அல்ல.

எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாதிகள் உருவாகவில்லை. வடக்கிலா கிழக்கிலா பயங்ரவாத செயற்பாடுகள் காணப்படுவதாக தகவல்கள் பதிவாகவில்லை. அவ்வாறெனின் பயங்கரவாத தடைச்சட்டம் ஏன் தொடர்ந்தும் வைத்திருக்கப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது அந்த சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். மறுசீரமைக்கப்பட வேண்டுமாயின் அந்த சட்டத்தின் கீழுள்ளவர்க்ள முதலில் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்படுவார்கள் ஆயின் எந்வொரு காரணமும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் விடுதலை ஆவர்.

சாட்சி இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதியும் கூறியுள்ளார். அதற்கு சட்டமா அதிபரும் நடவடிக்கை எடுத்துவருகின்றார். அரசியல் கைதிகளை தொடந்தும் தடுத்துவைப்பதற்கு காரணங்களை கூறுவதில் பிரயோசனம் இல்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் இது குறித்து கடுமையான கருத்துக்களை கூறியிருக்கின்றார்.அவரது கருத்துக்களுடன் நானும் உடன்படுகின்றேன்.

தொடர்ந்தும் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருக்க வேண்டாம் என கூறியுள்ளோம். நான்கு ஐந்து பேர் மாத்திரமே இருப்பதாக கூறிகின்றனர். ஏன் நான்கு ஐந்து பேரை தடுத்துவைத்திருக்கின்றார்கள். அவர்கள் செய்த விடயங்கள் அரசியல் ரீதியானது என்றால் அரசியல் காரணங்களுக்காக அதனை செய்தால் அது குற்றமாக இருந்தாலும் அரசியல் கைதிகள் என கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறே சிங்கள அரசியல்வாதிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டது. 

நாட்டில் 1971 88 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. அந்த கிளர்ச்சியாளர்களை நடத்தியதை போன்று தற்போதுள்ள கிளர்ச்சியாளர்களையும் நடத்த வேணடும் என நாம் தொடர்ந்தும் கூறிவந்திருக்கிறோம் தற்போது உண்ணதவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்கைதிகளின் நிலைமை பாரதூரமாகி மரணிப்பார்கள் ஆயின் அதனை பாரிய பிரச்சினையாக உலக நாடுகள் எடுத்துக்கொள்ளலாம் ஆகவே விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.