Breaking News

மஹிந்த அணி கொழும்பில் நாளை பேரணி

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள “எட்கா” உடன்படிக்கைக்கு எதிராக பாரிய எதிர்ப்புப் பேரணியொன்றை நடத்த மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் தீர்மானித்துள்ளனர்.

இந்தப் பேரணியை நாளை வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு – ஹைட்பார்க் மைதானத்தில் நடத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர். பேரணியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அமைப்புக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், “எட்கா” எதிர்ப்பு பொது முன்னணி ஒன்றை ஏற்படுத்தவும், ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.