Breaking News

இராணுவ குடியிருப்பு திறக்கப்படுவதற்கு வட மாகாண சபையில் எதிர்ப்பு

வவுனியா கொக்எலிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படைவீரர்களுக்கான 51 வீடுகளைக் கொண்ட நல்லிணக்க படைவீரர் கிராமத்தை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். இதற்கு, இன்று (வியாழக்கிழமை) இடம்பெறும் வட மாகாண சபையின் 48 ஆவது அமர்வில் ஆளும் கட்சியினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டுத்திட்டம், நல்லிணக்கத்திற்கான படைவீரர் கிராமம் எனக்குறிப்பிடப்படும் போதும், அதன் மூலம் அத்துமீறிய சிங்களக் குடியேற்றமே தமிழர் தாயகப் பகுதியில் அமைக்கப்படுவதாக ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, அவைத்தலைவர் முன்னிலையில் நின்று போராட்டம் நடத்தினர். குறித்த படைவீரர் கிராமம் திறக்கப்படும் பட்சத்தில், அவைக்கு வெளியேயும், தாம் போராட்டம் நடத்துவோம் என ஆளும் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தின் 56 ஆவது படைப்பிரிவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டம் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதென பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

- See more at: http://athavansrilanka.com/?p=322390#sthash.9qK13NW6.dpuf