Breaking News

எமக்கு எதிரான சகல நாடுகள் மீதும் தாக்குதல்- ISIS

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான சகல நாடுகள் மீதும் எதிர்வரும் காலங்களில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

நேற்று அரபு மற்றும் பிரான்சு ஆகிய மொழிகளில் பயங்கரவாத ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

தமக்கு எதிராக செயற்படும் நாடுகளில், எதிர்காலத்தில் இருண்ட நாள் ஒன்று உதயமாகும் எனவும் பயங்கரமான முடிவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கூறியுள்ளதாக இன்றைய சிங்கள தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.