Breaking News

முல்லைத்தீவில் முதல் நாள் விசாரணை – 120 பேர் சாட்சியம்

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 9 மணிமுதல் இடம்பெற்ற இவ் விசாரணையில் 120 பேர் சாட்சியம் அளித்துடன் 23 புதிய பதிவுகளும் இடம்பெற்றன.

நான்கு பிரிவாக இந்த விசாரணைகள் இடம்பெற்றதுடன், இன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்டவர்கள் சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சிப்பதிவுகள் நாளை மற்றம் நாளை மறுதினமும் தொடரவுள்ளன.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட சாட்சிப்பதிவுகளே இன்று ஆரம்பமாகின.

வட மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இடம்பெறவுள்ள இந்த விசாரணைகள் இன்றிலிருந்து எதிர்வரும் 30ஆம் திகதி வரையான ஆறு தினங்களுக்கு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.