மின்சாரம் துண்டிப்பு - இருளில் வைத்து விருதுகளை வழங்கினார் மைத்திரி - THAMILKINGDOM மின்சாரம் துண்டிப்பு - இருளில் வைத்து விருதுகளை வழங்கினார் மைத்திரி - THAMILKINGDOM

  • Latest News

    மின்சாரம் துண்டிப்பு - இருளில் வைத்து விருதுகளை வழங்கினார் மைத்திரி

    வட மேல் மாகாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்வு இருளில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

    பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி பேச ஆரம்பித்து சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி தனது பேச்சை முடித்துக் கொண்டு மேடையை விட்டு இறங்கியுள்ளார். ஜனாதிபதியினால் வழங்கப்படவிருந்த விருதுகளும் இருளில் வைத்தே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

    நிகழ்வு இடம்பெற்ற மண்டபம் 10 நிமிடங்கள் இவ்வாறு இருளில் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மின்சாரம் துண்டிப்பு - இருளில் வைத்து விருதுகளை வழங்கினார் மைத்திரி Rating: 5 Reviewed By: Tamilkingdom
    Scroll to Top