முறிகண்டியில் விபத்து - ஒருவர் பலி
முறிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதி ஓரம் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றுடன் மாங்குளம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.








