அட ஜனாதிபதி மைத்திரி இப்படிப்பட்டவரா - அம்பலமான இரகசியம் - THAMILKINGDOM அட ஜனாதிபதி மைத்திரி இப்படிப்பட்டவரா - அம்பலமான இரகசியம் - THAMILKINGDOM

 • Latest News

  அட ஜனாதிபதி மைத்திரி இப்படிப்பட்டவரா - அம்பலமான இரகசியம்

  அரசனாக தாம் செயற்பட தயார் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைத்தடாகத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை அரச நிருவாக சேவை சங்கத்தின் 33 ஆவது நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  நான் அமைச்சராக இருந்த காலத்திலும் ஜனாதிபதியாகிய பின்னரும் எனது மனைவி வீட்டிலிருந்து வாழை இலையில் சுற்றிக்கொடுக்கும் சோற்று பொதியையே நான் மதிய உணவாக உண்கிறேன். இதனை நான் முன்னர் யாருக்கும் சொன்னது கிடையாது என நினைக்கிறேன்.

  நான் உண்ணும்போது இங்கு வந்த என் நண்பர்கள் மூலம் இது வெளியே சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்.

  இதற்கு ஒரு தேரர் கூறியிருக்கிறார் ஜனாதிபதி ஜனாதிபதியாக உண்ண வேண்டும்,ஜனாதிபதி கிராமசேவகரை போல் உண்டு பயனில்லை,அதனால் ஜனாதிபதியின் வசதி வாய்ப்புக்களை இவருக்கு அனுபவிக்க தெரியாது என்ற கூறியிருந்தார்.

  அதாவது அரசன் உண்டதை போன்று என்னையும் உண்ணச் சொல்கிறார். அப்பிடி உண்ண  எனனால் முடியாது என  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அட ஜனாதிபதி மைத்திரி இப்படிப்பட்டவரா - அம்பலமான இரகசியம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top