Breaking News

மகிந்தவின் மேடையில் தடுக்கி விழுந்தார் உதய கம்மன்பில

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியின், அரச எதிர்ப்புப் பேரணியின் போது, மேடையில் தடுக்கி விழுந்தார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.

நேற்று பிற்பகல், மகிந்த ராஜபக்ச மேடைக்கு வந்த பின்னர், உதய கம்மன்பில உரையாற்ற அழைக்கப்பட்டார்.இதையடுத்து உதய கம்மன்பில ஒலிவாங்கிகள் வைக்கப்பட்டிருந்த மேடையின் நடுப்பகுதி நோக்கி வேகமாகச் சென்ற போது, கால் தடுக்கி கீழே விழுந்தார்.

எனி்னும், உடனடியாகவே சுதாகரித்துக் கொண்டு சிரித்தவாறே எழுந்த உதய கம்மன்பில அதன் பின்னர் உரையாற்றினார்.