கிளிநொச்சியில் சோகம் : நான்கு மாத சிசு சுவற்றில் அடித்து கொலை!
கிளிநொச்சி, திருநகர் பகுதியில் நான்கு மாதம் நிரம்பிய சிசுவை, தாயார் சுற்றில் அடித்து கொலைச் செய்துள்ள சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.
‘மஞ்சுளா பேக்கரி சந்தி’ என அழைக்கப்படும் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குழந்தையை சுவற்றில் அடித்த தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் குறிப்பிடப்படுவதுடன், உயிரிழந்த சிசுவின் சடலமும், தாயாரும் தற்போது கிளிநொக்சகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.








