Breaking News

யோஷித்தவின் பிணைமனு இன்று அறிவிப்பு

சி.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்தவின் பிணைமனு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் யோஷித்த உட்பட கைதுசெய்யப்பட்ட மேலும், நால்வரை விடுதலை செய்வது தொடர்பில் இறுதி அறிவிப்பு இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது.

சி.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல்மோசடிகள் தொடர்பில் யோஷித்த உள்ளிட்ட மேலும் நால்வர் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரையும் விடுதலை செய்வது தொடர்பிலான மனு கடந்த 8 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.எனினும் அன்றைய தினம் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட முடியாதென நீதவான் உத்தரவிட்டதுடன் இறுதி முடிவு எதிர்வரும் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.