கிளிநொச்சியில் விபத்து - ஒருவர் பலி, 6 பேர் காயம்
கிளிநொச்சி – ஏ9 வீதி - கரடிபோக்கு சந்திக்கும், பரந்தன் சந்திக்கும் இடையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு 1.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மதகுரு உட்பட 6 பேரையும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனத்துடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் நாகவிகாரையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வான், இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனம் அதிவேகத்தில் பயணித்ததனால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துள்ளாகியதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.