நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது - மஹிந்த
எவ்வித சவால்கள் வந்த போதும் 17ம் திகதி நடைபெறும் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அதனை தடுத்து நிறுத்த முடியாதென்றும் முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
தான் திருட்டுத்தனமாக கடன்கள் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறைத்த மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு திருட்டுத்தனமாக கடன் வழங்கும் நாடுகள் இருக்கின்றனவா என்றும் கேள்வி எழுப்பினார்.
களுத்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த அவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறான நகைச்சுவைகளினூடாக நாட்டை ஏமாற்ற முடியாதென்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவே இந்த அரசாங்கத்தை அமைக்க ஆதரவு வழங்கியதாகவும், அதேபோன்று அவர்கள் மீண்டும் அரசாங்கத்தை பாதுகாத்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.