Breaking News

கோதுமை மாவின் விலை 7.50 ரூபாயால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை 7.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோகிராம் கோதுமை மா, இந்த விலை அதிகரிப்பைத் தொடர்ந்து 97.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.