Breaking News

முதலமைச்சருக்கு எதிராக கூட்டத்தில் எதுவும் கதைக்கவில்லை

வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களாக இருக்கும் தமிழரசுக் கட்சி சார்ந்தவர்களுடன் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக எதுவும் கதைக்கப்படவில்லை என தமிழர சுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ். ஊடகம் ஒன்றுக்கு தொரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் வடக்கு மாகாண சபை ஒழுங்காக இயக்குவது பற்றியும் சபை அமர்வுகளின் போது சபை உறுப்பினர்கள் செம்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக் கூறப்பட்டதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மேலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தேவையற்ற முரண்பாடுகளை வளர்க்கக் கூடாது என அறிவுறுத்தியதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக எதுவும் கதைக்கப்படவில்லை என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.