Breaking News

இலங்கை கிரிக்கெட் அணிக்கான பொறுப்பில் மீண்டும் சங்ககார

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சர் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

இதன்பிரகாரம் சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெற்ற நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்கக்காரவும் இந்த குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து, இந்தியா மற்றும் பங்களாதேஷில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் ஸ்ரீலங்கா அணி பிரகாசிக்க தவறியதை அடுத்து தெரிவுகுழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் தெரிவுக்குழுவின் தலைவராக அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ரொமேஸ் களுவித்தாரண, லலித் களுப்பெரும மற்றும் ரஞ்சித் மதுர சிங்க ஆகியோரும் தெரிவுக்குழு உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.உலக கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஆரம்பமாவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியை தேர்வுசெய்யும் குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.