பதவிகளை இராஜினாமா செய்தார் அசாத் சாலி
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியா ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் பதவியிலிருந்தும் தான் இராஜினாமா செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அசாத் சாலி இதன்போது தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவரிடம் ஆதவனின் செய்திச்சேவை வினவியது. தனது இராஜினாமா குறித்த செய்தியினை உறுதிப்படுத்திய அசாத் சாலி இதற்கான காரணத்தை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளார்.








