Breaking News

மஹிந்த கால அபிவிருத்தியில் மோசடி இடம்பெறவில்லை- அமைச்சர் டிலான்

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டுவது போல் பெருந்தெருக்கள் அபிவிருத்தியின் போது சட்ட விரோதமான செயற்பாடுகளோ, ஊழல்களோ இடம்பெற்றிருக்க வில்லையென பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இன்று அதிகாலை (8) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

தான் குறித்த பகுதிக்கு அமைச்சராக உள்ளவன் என்ற வகையில் இதனை உறுதியாகவும் தெளிவாகவும் கூற முடியும். இதேபோன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் தங்களது பொறுப்பின் கீழ் அமைச்சுக்களில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதா? என்பதைக் கூற முன்வர வேண்டும்.

தெற்கு அதிவேகப் பாதையை அமைத்த அதே நிறுவனத்துக்குத் தான் கண்டிக்கான அதிவேகப் பாதை அமைப்பதனையும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. சிலபோது வலைவுகள் கூட உள்ள பாதை என்பதனால், தெற்கு பாதையை விட கூடுதலான நிதியை இதற்குச் செலவு செய்ய வேண்டியும் ஏற்படலாம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.