Breaking News

175 பாதால உலக முக்கிய புள்ளிகளை தேடி பொலிஸார் வேட்டை

மனிதப் படுகொலைகளை நண்பகல் வேளையில் புரிந்து விட்டு, முழு நாட்டையும் அச்சத்துக்குள்ளாக்கும் பாதால உலகக் குழுக்களின் தலைவர்கள் உட்பட அதனுடன் தொடர்புபடும் 175 பேருடைய பெயர்கள் பாதால உலக கும்பலுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள பாதால உலகக் குழுக்கள் பதுங்கியிருக்கும் இடங்கள், அவர்களுக்கு புகழிடம் வழங்கும் அரசியல்வாதிகள், இவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பான தகவல்களும் தற்பொழுது சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்பொழுது வரை அறியப்பட்டுள்ள பாதால உலக குழுக்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் அவ்விசேட பிரிவு வட்டாரங்கள் கூறியுள்ளன.