Breaking News

காணாமல்போனோர் விடயத்தில் டக்ளஸ்- சுமந்திரன் தர்க்கம்

காணாமல்­போனோர் விடயம் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான டக்­ளஸ்­ தே­வா­னந்தா மற்றும் எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோ­ருக்கு இடையில் சபையில் கடு­மை­யான வாய்தர்க்கம் ஏற்­பட்­டி­ருந்­தது.

நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பல­வந்­த­மாக காணாம­லாக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் அர­சியல் கைதிகள் குறித்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போது காணாமல் போன­வர்கள் தொடர்­பாக உண்மை நிலைமை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்­டு­மென குறிப்­பிட்­ட­போது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் குறுக்­கீடு செய்து நீங்கள் கார­ண­மா­க­வி­ருக்கும் சம்­ப­வங்­க­ளுக்கு என்ன செய்­யப்­போ­கின்­றீர்கள். ஆணைக்­கு­ழுக்­களின் முன்­னி­லையில் உங்கள் மீது குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. செய்­திகள் பத்­தி­ரி­கை­களில் வரு­கின்­ற­னவே என்றார்.

அதன்­போது உங்­க­ளுக்கும் சூக்­கா­வுக்கும் இடையில் காணப்­படும் தொடர்பை தினேஷ் எம்.பி. தற்­போது கூறினார் அல்­லவா? காணாமல் போன­மைக்கு நீங்கள் தான் காரணம் என்றார். இதன்­போது எம்.ஏ.சுமந்­தி­ர­னுடன் சாள்ஸ் நிர்மலநாதன் உங்கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதில் கூறுங்கள் என்­றனர். அதற்கு பதி­ல­ளித்த டக்ளஸ் எம்.பி. இளநீர் குடித்­தது யாரோ கோம்பை சூப்­பி­யது யாரோ எனக் கூறி­விட்டு உரையை தொடர்ந்­தி­ருந்தார்.

அதன் பின்னர் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபை நட­வ­டிக்­கைகள் நிறை­வ­டை­வ­தற்கு ஐந்து நிமி­டங்கள் இருக்­கும்­போது டக்ளஸ் தேவா­னந்­தாவைப் பார்த்து சுமந்­திரன் ஏதோ கூறினார். அத­னைத்­தொ­டர்ந்து டக்ளஸ் தேவா­னந்­தாவும் பதி­லுக்கு கூறினார்.

தொடர்ந்து தனது இருக்­கை­யி­லி­ருந்து கோப்­புக்­க­ளுடன் எழுந்து சென்ற டக்ளஸ் தேவா­னந்தா சுமந்­திரன் அமர்ந்­தி­ருக்கும் ஆசன வரிசைக்கு அருகாமையில் சென்று ஏதோ கூறிவிட்டு வெளியேறிருந்தார். அவர் வெளியேறும் தருணத்திலும் சுமந்திரன் வார்த்தைகளை வெளியிட்ட வண்ணமிருந்தமை குறிப்பிடத்தக்கது.