Breaking News

பெண்கள் சிறுவர்கள் மீதான வன்கொடுமையை கட்டுப்படுத்த கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தக் கோரி இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை பெண்கள் வலையமைப்பு, யாழ் மாவட்ட சட்டம் நீதிக்கான பணியகம் இணைந்து இந்த போராட்டத்தினை நடத்தியுள்ளது.

இதன்போது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் கிடைக்கும் வகையில் மகஜரும் கைளிக்கப்பட்டது.தாம் சுதந்திரமாக நடமாடுவதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தி தருமாறும், இதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

வவுனியா ஹரிஷ்ணவி, புங்குடுதீவு வித்தியா, கொடகெதன சேயா போன்ற இன்னும் எத்தனையோ வன்கொடுமைச் சம்பங்கள் நடந்தேறியுள்ள போதிலும், இதுவரையில் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.