பயரங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம் விரைவில்
பயரங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு பதிலாக சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் மாதங்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, இதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான சட்டமொன்று உருவாக்கப்படுமெனவும், இது தொடர்பிலான சட்டவரைபு சட்ட ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு அமைச்சுக்கு கையளிப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.








