யாழ்ப்பாணத்தில் தராகி சிவராம் 11ஆம் ஆண்டு நினைவு நாள் (படங்கள் இணைப்பு) - THAMILKINGDOM யாழ்ப்பாணத்தில் தராகி சிவராம் 11ஆம் ஆண்டு நினைவு நாள் (படங்கள் இணைப்பு) - THAMILKINGDOM
 • Latest News

  யாழ்ப்பாணத்தில் தராகி சிவராம் 11ஆம் ஆண்டு நினைவு நாள் (படங்கள் இணைப்பு)

  உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள்நினைவேந்தலும் அமரர் தராகி சிவராம் 11ஆம் ஆண்டு நினைவு நாளும் யாழ்ப்பாணத்தில் யாழ்.ஊடகஅமையத்தின் ஏற்பாட்டினில் குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 03.00 மணிக்கு இடம் பெற்றது.


  இதன்போது, மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதியில் படுகொலையான ஊடகவியலாளர்கள்மற்றும் ஊடகப் பணியாளர்களிற்கான நினைவு சுடரேற்றலும் மலர் அஞ்சலியும் இடம்பெற்றது.

  இதனை தொடர்ந்து பிற்பகல் 03.30 பொதுநூலக மண்டபத்தில் நினைவு உரைகள் மற்றும் ஊடகசுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தல்உத்தியோகபூர்வ அறிவிப்பு என்பவை வெளிடப்பட்டது.

  நினைவுரைகளை கலாநிதி ரகுராம், நிலாந்தன், பாசன, சந்தேசிய பண்டார, ஜோதிலிங்கம் ஆகியோர் ஆற்றினர்.

  இந்த நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும்தெற்கு அமைப்புக்கள். அரசியல் வாதிகள், பொதுமக்கள் என பல ஊடக நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர்.  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: யாழ்ப்பாணத்தில் தராகி சிவராம் 11ஆம் ஆண்டு நினைவு நாள் (படங்கள் இணைப்பு) Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top