திண்டுக்கல் மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு தேசிய விருது!
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
மத்தியம் பிரதேசம், போபாலில் 'இம்பீரியல் சொசைட்டி ஆப் இன்னோவேட்டிவ் இன்ஜினியர்ஸ்' அமைப்பின் சார்பில் தேசிய அளவிலான கார் பந்தய போட்டி கடந்த மார்ச் 25-ம் தேதி நடந்தது. இதில் 'சோலார்' கார்கள் பங்கேற்றன. திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி ஆட்டோமொபைல் துறை மாணவர்கள் கண்டுபிடித்த 'சோலார் காரும்' இதில் பங்கேற்றது.
இந்த சோலார் கார் மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், தேசிய அளவில் 12-வது இடத்தையும் பெற்றது. மேலும் சிறந்த வடிவமைப்பிற்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது. இதேபோன்று இந்த மாணவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக முன்பே தயாரித்த சுற்றுச்சூழல் பாதிக்காத 'இ பைக்'கும் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது.








