Breaking News

யாழில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு களத்தில்! - பலர் கைதாகலாம்

யாழ்ப்பாணத்தில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதன் பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புலனாய்வில் ஈடுபட்டு வருவதோடு, எதிர்காலத்தில் மேலும் பலரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தலாம் என்ற ஊகத்தை சாவகச்சேரி பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விவாரத்தில் நுணாவில் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதோடு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பூசா முகாமில் அவர் தடுத்து வைத்திருப்பதாக வெளியான தகவல் குறித்து தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.சிவில் உடையில் இவரை வெள்ளை வானில் கடத்திச்சென்று, பின்னர் கைது செய்த பயங்கரவாத விசாரணைப் பிரிவு பல்வேறு கோணங்களில் விசாரணை செய்திருப்பதாக சாவகச்சேரி பொலிஸார்  தெரிவித்தனர்.

இதுகுறித்த மேலதிக தகவல்களை வழங்க மறுத்த பொலிஸார், பயங்கரவாத விசாணைப் பிரிவினரின் அடுத்தகட்ட விசாரணைகளுக்கு அது தடையாக அமைந்துவிடலாம் என்றும் சுட்டிக்காட்டினர்.பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளில் ஒரு பகுதியாக சந்தேக நபரை வேறு இடங்களுக்கு வாகனங்களில் அழைத்துச் சென்று விசாரணை செய்வதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட மனைவி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதுகுறித்து மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தொடர்புடைய செய்தி -

சாவகச்சேரியில் வெள்ளைவானில் குடும்பஸ்த்தர் கடத்தல் : பூசா முகாமில் இருப்பதாக தகவல்