Breaking News

விடுதலை புலிகளின் தொப்பி விவகாரம்- மற்றுமொரு தமிழ் இராணுவ சிப்பாய் கைது



தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மானுடையது என நம்பப்படும் தொப்பி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாரஹென்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பின்னரே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியா பூவசரங்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.

நகுலன் என்ற குறித்த நபர் முன்னாள் போராளி என்றும், பின்னர் இராணுவ சிவில் நிர்வாகத்தின் முல்லைத்தீவு படையணியில் பணிபுரிந்துவந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த தொப்பியை இவர்கள் இருவரும் கூரியர் சேவை ஊடாக லண்டனுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.