எமது மக்களை கைவிடமாட்டோம்! - சம்பந்தன்
எமது மக்களை நாம் ஒரு போதும் கைவிடமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றைய தினம் மாகாணசபை உறுப்பினர்கள், அரச அதிபர் மற்றும் அலுவலர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், வைத்தியர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இந்த ஆண்டு ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் யாப்புத் தொடர்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது மக்களை நாம் ஒரு போதும் கைவிடமாட்டோம், அதேபோல் ஏற்றுக் கொள்ள முடியாத தீர்வினை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும், ஆயுத போராட்ட காலத்திலும் பல சந்தர்ப்பங்களை தாம் இழந்துள்ளதாக தெரிவித்த இரா. சம்பந்தன், எமது மக்களின் தேவை, அபிலாசை, ஆகியன உணர்வு மிக்க தீர்வாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.








