Breaking News

வடமாகாணசபை உறுப்பினர்களுடன் சம்பந்தன் கலந்துரையாடல்


வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருப்பதாக கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, வடமாகாண சபையின் குறைபாடுகள், நிவர்த்தி செய்யப்படவேண்டிய விடயங்கள் குறித்தும், வடமாகாண அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் கலந்துரையாடப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த சந்திப்பினை தொடர்ந்து இரா.சம்பந்தர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தனித்து சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

முதலமைசரில் கைவைத்த தமிழரசு தலமை அது கைகூடாமல் போகவே தற்போது 16 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் அமைச்சர்கள் மாற்றம் தொடர்பில் காய்களை நகர்த்தி வருவதாகவும் சம்பந்தரின் கலந்துரையாடலில் சிலர் கலந்துகொள்ள வில்லை என்றும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.