Breaking News

மே தின கூட்டத்தில் கலந்துகொள்வேன்! - மஹிந்த திட்டவட்டம்

அழைப்­பில்­லாமல் திரு­மண வீட்­டிற்குச் செல்­வது முறை­யற்­றது. அந்­த­வ­கையில், எதிர்­வரும் மே தினத்தில் கூட்டு எதிர்க் கட்­சியின் அழைப்பை ஏற்று கொழும்பில் இடம்­பெறும் கூட்டு எதி­ர­ணியின் மே தின கூட்­டத்தில் கலந்துக்கொள்­ள­வுள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

சர்­வ­தேச தொழி­லாளர் தினம் என்­பது கட்சி பேதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட தொழி­லா­ளர்­களின் நலனை உறுதி செய்யும் தின­மாகும். எனவே குறிப்­பிட்ட கட்­சியின் மே தின கூட்­டத்தில் தான் கலந்துக் கொள்ள வேண்டும் என யாரும் கட்­ட­ளை­யிட முடி­யாது . உழைக்கும் மக்­களின் உரி­மை­களை பாது­காப்­ப­தற்­காக சவால்­களை எதிர்­கொண்டு போரா­டுவோம் எனவும் முன்னாள் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

சித்­திரைப் புத்­தாண்டை முன்­னிட்டு பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அலு­வ­ல­கத்தில் பால் பொங்கும் நிகழ்வு நேற்­றுக்­காலை இடம்­பெற்­றது.

இதில் கலந்துக் கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

இலங்­கையின் உள் நாட்டு யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வந்து , நாட்டை அபி­வி­ருத்தி பாதையில் முன்­னெ­டுத்­தி­ருந்தோம். மிகவும் எளி­தாக உண்ண கூடிய வகையில் “கேக்” கை தயா­ரித்­தி­ருந்தோம். ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் திடீ­ரென ஆட்­சிக்கு வந்து அனைத்­தையும் சீர­ழித்து விட்­டது. அதா­வது நாம் தயா­ரித்து வைத்­தி­ருந்த கேக்கை தற்­போ­தைய அர­சாங்கம் ஒழுங்­காக உண்­ண­வில்லை. அனைத்­தையும் குழப்­பி­விட்­டது.

நாட்டின் பொரு­ளா­தாரம் மிகவும் மிகவும் மோச­மான நிலையில் காணப்­ப­டு­கின்­றது. நாட்டு மக்கள் எவ்­வாறு புத்­தாண்டை கொண்­டா­டி­னார்கள் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும் . எனவே பொது மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும். எதிர்­வரும் மே தினம் தொடர்­பாக நாங்கள் செயற்­பட்டு வரு­கின்றோம். கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள கூட்டு எதிர் கட்­சியின் மே தின கூட்­டத்­திற்கு எனக்கு அழைப்பு கிடைத்­துள்­ளது.

ஆனால் காலியில் நடைப்­பெ­ற­வுள்ள மே தின கூட்டம் தொடர்பில் எமக்கு எவ்­வி­த­மான அழைப்போ அல்­லது அறி­விப்போ இது­வரை கிடைக்­கப்­பெற வில்லை. எனவே அழைப்­பில்­லாமல் திரு­மண வீட்­டிற்கு செல்­வது முறை­யல்ல என்­பது அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்ள கூடிய நிலைப்­பா­டாகும்.

மே தினம் என்­பது உழைக்கும் மக்­களின் உரி­மை­களை வலி­யு­றுத்தும் உன்­ன­த­மான நாளாகும் . இங்கு கட்சி பேதங்­க­ளுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது . எமது மே தின கூட்டத்திற்கு தான் வர வேண்டும் என்றும் யாரும் கட்டளையிட முடியாது . அன்றைய தினம் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடுவோம் என்றார்.