ஜடேஜாவின் திருமண வைபவத்தில் துப்பாக்கிச் சூடு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜடேஜாவுக்கும், மெக்கானிக்கல் என்ஜினீயர் ரிவா சோலங்கிக்கும் திருமணம் ராஜ்கோட்டில் நேற்றுமுன்தினம் வெகு விமரிசையாக நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, வெய்ன் பிராவோ உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக ரவீந்திர ஜடேஜா மணக்கோலத்தில் குதிரையில் அழைத்து வரப்பட்ட போது, சில அடி தூரத் தில் நின்ற அவரது உறவினர்களில் ஒருவர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக அங்கு வந்த பொலிஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.








