இலங்கை மீதான தடையை நீக்குமா ஐரோப்பிய ஒன்றியம்? – நாளை முடிவு
இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதித் தடையை நீக்குவது குறித்து தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் நாளை நடக்கவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான அடுத்த நகர்வு குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று, இலங்கை கடற்றொழில் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாது என்றும், அதற்கு காலஅவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.








