Breaking News

கோத்தா கைது செய்­யப்­பட்டால் அது விக்கி,சம்பந்­த­னுக்கு கிடைக்கும் வெற்றி..!!

அமெ­ரிக்­காவில் வைத்து கோத்­த­பாய ராஜபக்ஷ கைது செய்­யப்­பட்­டாலோ அல்­லது விசா­ரிக்­கப்­பட்­டாலோ அது இலங்­கையில் தனித்தமி­ழீ­ழத்தை அமைப்­ப­தற்­காக சம்­பந்தன், விக்கி­னேஸ்­வரன், புலம்­பெயர் புலி­க­ளுக்கு கிடைக்கும் வெற்­றி­யாகும் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது.

சமஷ்டி ஆசையை காட்டி தமிழ் மக்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்தி சிங்­கள மக்­களை தூண்­டி­வி­டு­வதே சம்­பந்­தனின் நிகழ்ச்சி நிர­லாகும் என்றும் அந்த இயக்கம் குறிப்­பிட்­டுள்­ளது. இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்;

கோத்­த­பாய ராஜபக்ஷ அமெ­ரிக்கப் பிர­ஜை­யாகும். எனவே தான் விடு­தலைப் புலிகள் சார்பு, புலம்­பெயர் அமைப்­புக்கள் அவரை கைது செய்­யு­மாறு ஒபா­மா­விடம் வேண்­டுகோள் முன்­வைத்­துள்­ளன.

இதன் அடிப்­ப­டையில் கோத்­த­பாய ராஜபக் ஷ கைது செ்யயப்­பட்­டாலோ அல்­லது அமெ­ரிக்­காவில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டாலோ அது இலங்­கையில் தனித் தமி­ழீ­ழத்தை அமைப்­ப­தற்கு முயற்­சிக்கும் சம்­பந்தன், விக்­கி­னேஸ்­வரன் புலம்­பெயர் புலி­க­ளுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்­றி­யாகும்.

அத்­தோடு யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யையும் இந்த முக்­கூட்­டணி வலி­யு­றுத்தி இதற்­கான சந்­தர்ப்­பத்தை பெற்றுக் கொள்ளும். இன்று இந்த அர­சாங்­கத்­தி­னூ­டாக 13 ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் வெற்றி கண்­டுள்ள தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு எதிர்­கா­லத்தில் படிப்­ப­டி­யாக காணி, பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையும் பெற்றுக் கொள்ளும்.

அதன் பின்னர் அமெ­ரிக்­காவின் உத­வி­யு­டனும் இந்­தி­யாவின் உத­வி­யு­டனும் தனித் தமி­ழீ­ழத்­துக்­கான நிகழ்ச்சி நிரலை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்கும். இதுவே இவர்­க­ளி­னது வேலைத் திட்­ட­மாகும். அதனை சூட்­சு­ம­மாக முன்­னெ­டுக்­கின்­றனர்.

தமிழ் மக்கள் மத்­தியில் சமஷ்­டியை பெற்றுக் கொடுப்­ப­தாக ஆசை காட்டி சந்­தோ­சப்­ப­டுத்தி அவர்கள் மத்­தியில் மீண்டும் பிரி­வி­னை­வாத எதிர்­பார்ப்­பினை ஊக்­கு­வித்து பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களை மறக்கச் செய்யும் நட­வ­டிக்­கை­களை கூட்­ட­மைப்பு முன்­னெ­டுக்­கின்­றது . மறு­புறம் சிங்­கள மக்­களை தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக தூண்­டி­விடும் செயற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதன் மூலம் இன மோதல்­களை ஏற்­ப­டுத்தி சர்­வ­தேச தலையீடுகளை ஏற்படுத்துவதே இலக்காகும்.

இந்த இலக்கு பெற்றுக்கொள்ளப்பட்டால் சிங்கள மக்களுடன் தமிழ் மக்களுக்கு இணைந்து வாழ முடியாது என சர்வதேசத்திற்கு இனங் காட்டப்பட்டு தனித்தமிழீழத்தை அமைத்து நாட்டை பிரிப்பதே நோக்கமாக அமையும் என்றார்.