Breaking News

என்ன செய்யப் போகிறேன்- புதிய பொலிஸ் மா அதிபர் இன்று உரை

புதிய பொலிஸ் மா அதிபர், தான் ஆற்றவுள்ள புதிய வேலைதிட்டம் குறித்து இன்று நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

இதற்காக இன்று பொலிஸ் தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அவர் எற்பாடு செய்துள்ளார்.புதிய பொலிஸ் மா அதிபருக்கு இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் வரவேற்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து, பொலிஸ் மா அதிபர் தலைமையகத்திலுள்ள அதிகாரிகளுடன் இன்று காலை 8.30 மணிக்கு கலந்துரையாடவுள்ளார் இந்த கலந்துரையாடலினையடுத்து அவர் ஊடகங்களுக்கு அவரது வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் தலைமையகம் விசேட ஊடக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது