Breaking News

மைத்திரி ஏன் கட்சியிலிருந்து சென்றார்?- மஹிந்த விளக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலின் போது இணைந்து போட்டியிடத் தீர்மானித்தமைக்கான காரணம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அவருக்கு ஏற்பட்ட கொள்கைப் பிரச்சினையல்ல. மாறாக கட்சிக்குள் ஏற்பட்ட பதவிப் பிரச்சினையே ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பதிலளித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளுராட்சி சபை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதும் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியதற்கான காரணம் கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடு என கூறியிருந்தார்.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி நேற்று அம்பிலிப்பிட்டிய தோரகொலயாய ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.