Breaking News

இன்று தாய்லாந்து செல்கிறார் மகிந்த


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலாசார நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்த போதிலும் கடைசி நேரத்தில் அந்தப் பயணம் ரத்துச் செய்யப்பட்டது. இன்று தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ள மகிந்த ராஜபக்ச சில நாட்களில் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் தாய்லாந்து செல்லவுள்ளார்.