மஹிந்தவும், அனுரவும் மௌனம்
புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவும், ஜே வி பியும் இதுவரை எந்த யோசனைகளையும் முன்வைக்கவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அரசியல் யாப்பு தொடர்பான பொதுக் கருத்துக்களை திரட்டி வந்த விசேட குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
யோசனையை முன்வைக்குமாறு ஜே வி பியிடம் இரண்டு தடவைகள் கோரப்பட்ட போதும், இதுவரையில் அதற்கு பதில் வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில் ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவையிடமும் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








