சம்பந்தனுக்கு எதிராக விசாரணை..!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சி காவல்துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிபஞ்சான் கஜபா இராணுவ முகாமின் படைத்தளபதி உள்ளிட்ட சிலர் சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த 16ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன் போன்றவர்கள் பரவிபஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்குள் அத்து மீறி பிரவேசிக்க முயற்சித்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.