ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் இருவர் இலங்கை வருகின்றனர்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் இம்மாத இறுதியில், இலங்கைக்கு உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் மொனிக்கா பின்ரோ, சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டேஸ் ஆகியோரே எதிர்வரும் மாதம் 29 ஆம் நாள் கொழும்பு வரவுள்ளனர்.
இவர்கள், அடுத்த மாதம் 07ஆம் நாள் விரை இலங்கையில் தங்கியிருந்து, நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான மதிப்பீடுகளை செய்யவுள்ளனர்.
சுயாதீன நீதித்துறை, நீதித்துறையின் தொழில்சார் தன்மை, நாட்டின் சட்ட கட்டமைப்பு ஆகியன தொடர்பாக மதிப்பீடுகளை செய்யும், இந்த இரண்டு சிறப்பு அறிக்கையாளர்களும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமது அறிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.