முன்னாள் போராளிகள் ஏன் கைது செய்யப்படுகின்றனர் - அம்பலப்படுத்தினார் சுவாமிநான்
ஆளும் கட்சியினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்திற்கு யாழில் இருந்து முன்னாள் போராளிகளை கலந்துரையாடல் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளமை அமைச்சர் சுவாமிநாதனின் கூற்றிலிருந்து அம்பலமாகியுள்ளது.
வடக்கில் உள்ள மாவட்டச் செயலகங்களில் உள்ள புனர்வாழ்வுக் கிளைகள் மூலம் உள்ள பதிவு விபரங்களின் பிரகாரம் முன்னாள் போராளிகளை கொழும்பில் புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சந்திக்கின்றனர் என்னும் பெயரில் அழைக்கப்படுவதாக போராளிகள் பலரும் அச்சம் வெளியிடுகின்றனர்.
இவ்வாறு போராளிகள் உங்களின் பெயரில் அழைக்கப்படுவதனால் அச்சப்படும் போராளிகளிற்கு நீங்கள் கூறும் காரணம் என்ன எனவும் அவ்வாறு எதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் சுவாமிநாதனிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாம் அமைச்சு ரீதியாக யாரையும் நேரடியாக அழைக்கவில்லை . இருப்பினும் கொழும்பில் இடம்பெறவுள்ள மேதினத்திற்கு யாழில் இருந்தும் யாரும் பங்கு கொள்ள முடியும். அதற்காகவே இவர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்று பதிலளித்தார்.








