ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கட்டுநாயக்கவில் கைது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சமூகவலைத்தளத்தில் அச்சுறுத்தல் விடுத்தவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யபப்பட்டுள்ளார்.
யக்கலவைச் சேர்ந்த இந்த சந்தேக நபர், மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையம் திரும்பிய போது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
மலேசியாவில் நுழைவிசைவு காலாவதியான நிலையில் இவர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.சந்தேக நபர் கொழும்பு பிரதம நீதிவான் முன்பாக நிறுத்தப்படவுள்ளார்.