Breaking News

கிளிநொச்சியில் வாகன விபத்து - இரண்டு மாணவர்கள் பலி

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்நதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். பாரதிபுரத்தைச் சேர்ந்த ஜோன் கந்தசாமி டிலக்சன் மற்றும் மலையாளபுரம் சேர்ந்த விஸ்வநாதன் ஜனார்த்தன் ஆகிய மாணவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.