தேசிய நல்லிணக்க முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது – யசூசி அகாசீ
தேசிய நல்லிணக்க முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது என ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசீ தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜப்பான் விஜயம் செய்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முனைப்புக்கள் குறித்து பிரதி அமைச்சர் அகாசீக்கு தெளிவுபடுத்தியுள்ளார். நல்லிணக்க முயற்சிகளுக்கு முழு அளவில் ஜப்பான் ஆதரவளிக்கும் என அகாசீ தெரிவித்துள்ளார்.








