கோட்டாபயவைக் கைது செய்ய முடியாது- அமெரிக்கா
அமெரிக்கா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இரு தமிழ் அமைப்புக்கள் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
தமிழ் ப்போர் ஒபாமா (Tamils for Obama) மற்றும் அமெரிக்கன் தமிழ் போரம் (American Tamil Forum) ஆகிய இரு அமைப்புக்களுமே இவ்வாறு அவசர கோரிக்கையை முன்வைத்திருந்தன.
போர் குற்றச்சாட்டுக்களின் முக்கிய நபராக கருதப்படும் ஒருவரை கைதுசெய்து வழக்கு தாக்கல் செய்யும் வாய்ப்பை அமெரிக்கா தவறவிடக்கூடாது என அமைப்புக்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க நாடானது சர்வதேச நீதிமன்றத்துக்குரிய ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டில்லாததனாலும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சர்வதேச பிடியாணைகள் எதுவும் பிறப்பிக்கப்படாதுள்ளதனாலும் அமெரிக்க அரசாங்கம் இந்த மனுவை நிராகரிப்பதாகவும் அந்நாட்டு இராஜாங்க திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.








