வடக்கின் சமஷ்டி பிரேரணை நடைமுறைச் சாத்தியமற்றது- பைஸர் முஸ்தபா
வட மாகாண சபை சமஷ்டி முறைமையிலான தீர்வை முன்வைத்துள்ள போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்களோ அதனை ஒரு போதும் பெற்றுக் கொடுக்க இணங்க மாட்டார்கள் என மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இது போன்ற பிரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். அத்துடன், மக்கள் கருத்துக் கணிப்புக்கு அது விடப்படல் வேண்டும்.
இதனால், இது போன்ற தீர்மானங்கள் நடைமுறைச் சாத்திய மற்ற ஒரு அம்சமாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி நாட்டில் சமாதானமான ஒரு பயணத்தை ஆரம்பிக்க முற்படும் போது, இது போன்ற பிரேரணைகளினால் அப்பயணம் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.