மஹிந்தவை கொலை செய்ய கோத்தபாய சதி!
கடந்த 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்திற்கு அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின்படி இந்த உளவு நடவடிக்கையின் பின்னால் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
முக்கியமாக குறித்த நபர் எவன்கார்ட் நிறுவனத்தில் சேவை செய்த ஒருவராகும். அதற்கமை அவருக்கு ஆயுதங்களை கையாள்வது தொடர்பில் அனுபவம் கொண்டிருப்பார்.
மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு, சமகால அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் திட்டம் என பிரச்சாரம் செய்ய கூட்டு எதிர்க்கட்சியினர் முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் கடந்த கால சம்பவங்கள் தொடர்பில் கண்கானித்த போது, இது ராஜபக்ஷ குடும்பத்தின் உள் மோதலின் ஒரு பகுதி என தெரியவந்துள்ளதாககுறிப்பிடுகிறார்.
கோத்தபாய ராஜபக்ச கடந்த பொதுத் தேர்தலில் கோட்டை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட ஆயத்தமாகிய போதிலும், அதற்கு ஏனையவர்களினால் அனுமதிக்கப்படவில்லை.
பிரதானமாக மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் தொடர்பில் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
அண்மையில் ஹைட் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தின் பின்னர் கோத்தபாய ராஜபக்சவை அமைதியாகுமாறு மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
அத்துடன் புதிதாக உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்காக தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்சவுக்கு பதிலாக புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது கோத்தபாய ராஜபக்சவின் கருத்தாகும்.
இதன் ஊடாக புதிய கட்சியின் தலைவர் பதவியை தனக்கு கிடைக்க வேண்டும் என்பதே கோத்தபாயவின் நோக்கமாகும். கடந்த சில நாட்களுக்குள் இது தொடர்பில் குடும்பத்திற்குள் உள்ள முரண்பாடுகள் காரணமாக கோத்தபாய மிகவும் மனமுடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனைத்து தகவல்கள் தொடர்பிலும் அவதானத்தை செலுத்தும் எவன்கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனங்களில் செயற்பட்ட ஊழியர் ஒருவரை ஈடுபடுத்தி மஹிந்த ராஜபக்ச செல்லும் இடங்கள் தொடர்பில் தகவல் சேரிப்பதற்கும் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அவருக்கு கோத்தபாயவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.